என்.ஐ.ஏ தேடிவந்த பயங்கரவாதி, வழிப்பறி வழக்கில் சென்னையில் கைது.. விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


வழிப்பறி வழக்கில் கைதான நபருக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள பெரியமேடு காவல் நிலையம் அருகே கடந்த 5 ஆம் தேதி சுராஜ் என்ற நகை வியாபாரியிடம் வழிப்பறி கொள்ளை நடைபெற்றது. சுராஜிடம் இருந்த 282 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.7.50 இலட்சம் பணம் ஆகியவை வழிப்பறி செய்யப்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரில் ஒருவராக இருந்த யாசின் என்பவனை காவல் துறையினர் கைது செய்தனர். அவனிடம் விசாரணை மேற்கொண்டு, அவனது கூட்டாளியான ரபீக் என்பவனையும் காவல் துறையினர் கைது செய்தனர். 

ரபீக்கிடம் மேற்கொண்ட விசாரணையில் அவன் சி.பி.சி.ஐ.டி மற்றும் என்.ஐ.ஏ அமைப்புகளால் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது உறுதியானது. ரபீக் பாகிஸ்தான் உளவு அமைப்பு மூலமாக சென்னையில் கள்ளநோட்டை விநியோகம் செய்பவன் என்பதும் அம்பலமானது.

மேலும், அல் உமாஹ் (Al Ummah) என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ரபீக் என்.ஐ.ஏ அதிகாரிகளால் தேடப்பட்டும் வந்துள்ளான். இந்நிலையில், ரபீக் திருட்டு வழக்கில் பெரியமேடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவனை என்.ஐ.ஏ அதிகாரிகள் தங்களின் கண்காணிப்பு வளையத்தில் வைத்து விசாரிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA Searching Al Ummah Terrorist Arrest by Chennai Periyamedu Police Cheating Case Investigation Turning Point


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->