என்.ஐ.ஏ அதிகாரிகள் மதுரை, இராமநாதபுரத்தில் திடீர் சோதனை.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 

இலங்கையில் இருந்து கள்ளத்தோணி மூலமாக, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு வந்த மர்ம நபர்கள், அங்கிருந்து கர்நாடக மாநிலத்தில் பெங்களூருக்கு சென்றுள்ளனர். பெங்களூரில் காவல் துறையினர் எதற்ச்சையாக விசாரணை மேற்கொண்ட போது, சுமார் 10 க்கும் மேற்பட்ட இலங்கை நாட்டவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்தது அம்பலமானது. 

மேலும், தங்களுக்கு தமிழகத்தை சார்ந்த சிலர் இலங்கையில் இருந்து தமிழகம் வரவும், தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்லவும் உதவி செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து, இந்த தகவல் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலை அறிந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மரைக்காயர்பட்டினம், இராமநாதபுரம், வேதாளை, சுந்தரமடையான் பகுதியில் சோதனை நடந்து வருகிறது. 

மேலும், மதுரை மாவட்டத்தில் உள்ள கப்பலூர், பாசிங்காபுரம் உட்பட 3 இடங்களில் அதிரடி சோதனை நடந்து வருகிறது. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகம் வர காரணம் என்ன?. எதற்காக இங்கிருந்து பெங்களூர் சென்றார்கள்?. அவர்களுக்கு உதவி செய்தது யார்? என விசாரணை நடந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA Officials Raided at Ramanathapuram and Madurai Districts about Illegal Entry from SriLanka


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->