ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்றாலும், என்.எல்.சி இந்தியா கொடுத்த அதிர்ச்சி விளக்கம்!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர் பணிகளுக்கு நடைபெற்ற தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. மேலும் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அனைத்து கட்சியினரும் எதிர்ப்பும் போராட்டங்களையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பொறியாளர் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று என்எல்சி இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக வெளியான தகவல்கள் தவறானது என்றும், பொறியாளர் தேர்வுக்கு 1.11 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 59,545 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். மேலும் தேர்வை வெளிப்படையாக நடத்தியதுடன், தேர்வு முழுவதும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.   

நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்ட 1,582 பேரில் 8 பேர் மட்டுமே தமிழர்கள் என சர்ச்சை எழுந்துள்ள நிலையில் என்எல்சி இந்தியா நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. அதே சமயம் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகளும் அறிக்கை விட்டதுடன் போராட்ட களத்தில் குத்தித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neyveli NLC Answer about Exam North Indian Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->