ஆளுக்கு ஒன்னு கொடுக்க முடியுமா..? திமுகவில் அடுத்த எம்.பி யார்..? அடம்பிடிக்கும் முக்கிய புள்ளிகள் - கசிந்த இரகசியம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்கள் தொகை அளவு, பரப்பளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 18 மாநிலங்களவை இடங்கள் உள்ளன. ஒரு மாநிலங்களவை இடத்தை பெறுவதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற வேண்டும்.

ஒரு மாநிலங்களவை எம்.பி.யின் பதவி காலம் 6 ஆண்டுகள். இவை சுழற்சி முறையில் காலியாகும்.

நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால் கூடுதலாக ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியை பெறுகிறது. இதன்மூலம் மாநிலங்களவையில் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்.

தி.மு.க.வில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வுக்கு பிறகு 8 எம்.எல்.ஏ.க்கள் உபரியாக இருப்பார்கள்.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி ம.தி.மு.க.வுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியை தி.மு.க. ஒதுக்கியது. அதன்படி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்.

தி.மு.க.வில் மீதியுள்ள 2 மாநிலங்களவை இடத்தில் ஒரு தொகுதியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக காங்கிரஸ் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரசுக்கு கொடுத்த போது மீதமுள்ள ஒரு எம்.பி. பதவியை தி.மு.க. யாருக்கு கொடுக்க போகிறது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Next-month-Rajya-Sabha-election-Vaiko


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->