பா.ம.கவிற்கு கிடைக்கப்போகும் எம்.பி பதவி - பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்து வெளியான அறிவிப்பு.? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 18 மாநிலங்களவை இடங்கள் உள்ளன. ஒரு மாநிலங்களவை இடத்தை பெறுவதற்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டும்.

ஒரு மாநிலங்களவை எம்.பி.யின் பதவி காலம் 6 ஆண்டுகள். இவை சுழற்சி முறையில் காலியாகும்.

தமிழக மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரது பதவி காலம் ஜூலை 24 ஆம் தேதி முடிகிறது.

அ.தி.மு.கவை சேர்ந்த வி.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜூனன், டி.ரத்னவேல், ஆர்.லட்சுமணன் ஆகியோர் மற்றும் கனிமொழி (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோரின் பதவி காலம் முடிகிறது.

இதனால் புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது.

234 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆக உள்ளது. தி.மு.க. கூட்டணி எண்ணிக்கை 110 ஆக இருக்கிறது. டி.டி.வி. தினகரன் ஒரு தொகுதியில் உள்ளார்.

இதன்மூலம் மாநிலங்களவையில் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்.

ஒரு உறுப்பினருக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இதன்மூலம் அ.தி.மு.க.வில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு 102 பேர் தேவை. 21 எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சியில் உபரியாக இருப்பார்கள்.

மக்களவை தேர்தலின் போது பா.ம.க.வுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.

இதன்படி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேல்சபை எம்.பி.யாகிறார். அவர் ஏற்கனவே 2004 முதல் 2010 வரை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Next-month-Rajya-Sabha-election--Anbumani


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->