புதிய திட்டம் தீட்டிய இபிஎஸ்! அதிர்ச்சியில் ஓபிஎஸ்! சட்ட நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை! - Seithipunal
Seithipunal


ரகசியத்தை காத்த இபிஎஸ் தரப்பு! தற்காலியே நிம்மதியையும் இழந்த ஓபிஎஸ் தரப்பு!

அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புகள் சட்டரீதியான போராட்டங்களை நீதிமன்றத்தில் நடத்தி வருகின்றன. ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற  இரு நபர் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் செய்த மேல்முறையீட்டு மனுவை நேற்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அதில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த மாட்டோம் என இபிஎஸ் சிறப்பு உத்தவாதம் அளித்ததால் இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தற்காலிகமாக நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இபிஎஸ் தரப்பினர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் சிலரை தங்கள் பக்கம் இழுப்பது மற்றும் அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்துவது என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இபிஎஸ் தரப்பு மேலும் ஒரு ரகசிய நகர்வை மேற்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு 21ஆம் விசாரணைக்கு வரவுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வர காலதாமதம் ஆகும். அதன் பின்னரே அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்ற நிலையில் அதிமுக உறுப்பினர்களுக்கான புதிய அடையாள அட்டை அச்சிடும் பணியை எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பு மேற்கொண்டு வருகிறது.

எம்ஜிஆர் காலத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அவருடைய மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா படம் இணைத்து புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டதால் புதியதாக வழங்கப்பட்ட அனைத்து உறுப்பினர் அட்டைகளிலும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் படங்கள் இடம் பெற்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி வந்தனர்.

தற்பொழுது ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். இதனால் ஓபிஎஸ் படம் இல்லாத புதிய அடையாள அட்டை அச்சிடும் பணியை இபிஎஸ் தரப்பு மேற்கொண்டு வருகிறது. அச்சிடும் பணி நிறைவு பெற்றதும் மாவட்ட வாரியாக அடையாள அட்டை பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர். 

அடுத்த பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பு இந்த புதிய அடையாள அட்டைகளை அதிமுக உறுப்பினர்களுக்கு வழங்க ஆலோசித்து வருகின்றனர். மேலும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்த பின்பு பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் பொழுது புதிய அடையாள அட்டை வைத்துள்ள உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். புதிய அடையாள அட்டைகள் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது. 

தற்பொழுது அதிமுகவைச் சார்ந்த அனைத்து செயல்பாடுகளும் எடப்பாடி பழனிச்சாமி அணியினரே மேற்கொள்வதால் தற்பொழுது இவர்கள் வழங்கப்படும் அடையாள அட்டையால் அதிமுக முழுமையாக பழனிச்சாமி அணி கட்டுப்பாட்டிற்குள் போய்விடும். புதிய உறுப்பினர் அட்டைகளைப் பெற அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதை அறிந்த ஓபிஎஸ் தரப்பு தற்பொழுது அவர்கள் மேற்கொள்ளும் பணியை முறியடிக்க சட்டக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மேலும் இபிஎஸ்க்கு எதிராக அதிருப்தியில் உள்ள முன்னாள் மூத்த தலைவர்களை ஒருங்கிணைக்கவும் ஓபிஎஸ் அணியினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Newly planned EPS OPS in shock Consult with a team of legal experts


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->