திருச்சி: பச்சிளம் குழந்தை இறந்த விவகாரத்தில் புதிய திருப்பம்... விளக்கெண்ணை கொடுத்ததால் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


பச்சிளம் குழந்தை இறந்த விவகாரத்தில் குழந்தைக்கு  விளக்கெண்ணெய் கொடுத்ததால் இறந்தது தெரியவந்து.

திருச்சி மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பால முருகன் – சாந்தி தம்பதி. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது, மேலும், கடந்த  அக்டோபர் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

இந்த குழந்தை சரிவர தாய்பால் குடிக்காததால் காரணத்தால் வயிற்று வலி ஏற்பற்பட்டது.  இந்நிலையில், குழந்தைக்கு இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் கொடுத்துள்ளார். இதனை அடுத்து, சில நாட்களில் குழந்தைக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டது.

உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.  இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி பாலகிருஷ்ணன்  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “ பொதுமக்கள் தவறான சிகிச்சை முறைகளை தாங்களே கையாள்வதும் உடல்நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வரும் முதியவர்கள் , பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் உரிய கல்வித்தகுதி இல்லாமல், முறையான பயிற்சி பெறாமல் தவறான சிகிச்சை அளிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

உரிய அங்கீகாரம் இல்லாமால் தவறான மருத்துவ சிகிச்சை அளித்து அதன்காரணமாக நோயாளிகள் உயிர் இழக்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New twist on the issue of the death of a green child


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->