தமிழகத்தில் 2 மாவட்டங்களில் அமைப்படுத்தப்பட்ட திட்டம்..அடுத்தடுத்து தமிழகம் முழுவதும் அமல்.! - Seithipunal
Seithipunal


குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியா முழுவதும் உள்ள எந்த ரேஷன் கடையிலும் அரசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

இந்தாண்டு ஜூன் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தபட உள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் அதற்கு முன்னோட்டமாக ஒரே மாநிலம் ஒரே ரேஷன் எனப்படும் உள்மாநில பெயர்வுத் திறன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அதன்படி தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எந்தக் ரேஷன் கடையிலும் அரிசி, சக்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தை சோதனை அடிப்படையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று அமல்படுத்தியது தமிழக அரசு. இதில் கிடைக்கும் தகவலை கொண்டு பின்னர் இந்த திட்டம் படிப்படியாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new scheme started in two district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->