கைரேகை வைத்தால் தான் ரேஷன் பொருள் கிடைக்கும்! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய திட்டம்! - Seithipunal
Seithipunal


ரேஷன் கடைகளில் அதிகளவில் முறைகேடு நடப்பதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டேனா இருந்தது. அதாவது ரேஷன் அரிசிகளை முறைகேடாக விலைக்கு விற்பதாகவும் பரப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை அதிக விலைக்கு வெளியே விற்பதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, அதிரடி சோதனையில் ஈடுபடும் போலீசார் டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். அரிசி முறைகேடாக விற்பனை செய்யப்படுவதற்கு ரேஷன் கடை ஊழியர்களும் உடந்தையாக இருப்பது போலீசார் விசாரணையில் பல இடங்களில் அம்பலமானது. இது போன்ற முறைகேடுகளை தடுக்கவே ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் ரேஷன் கடைகளில் முறைகேடு தடுக்கமுடியவில்லை.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் முறைகேடுகளை தடுக்க கைரேகை வைக்கும் புதிய நடைமுறை நாளை(செப் 7) முதல் அமலாக உள்ளது. இதன் மூலம், குடும்ப அட்டையில் இருப்பவர்கள் யாரேனும் ஒருவர் கைரேகை வைத்தால் தான் ரேஷன் பொருட்கள் வாங்க முடியுமாம். இதனால் ஒருவர் ரேஷன் அட்டையை மற்றொருவர் பயன்படுத்துவது தடுக்கப்படுகிறதாம். வசதியாக இருப்பவர்கள் எல்லாம் ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைத்து ரேஷன் பொருட்கள் வாங்க தயங்குவார்கள் என்பதால் அரசுக்கு ரேஷன் செலவு மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தினால் ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படுவதால் விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள  எல்லா மாவட்டத்திலும் இந்த திட்டம் அமலாகவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new scheme for buy rice in ration shops


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->