தமிழக பட்ஜெட்டில் மூன்று மாவட்டங்களுக்கு அதிரடியாக அறிவிக்கப்பட்ட திட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டினை தாக்கல் செய்தார்.

2020-2021ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியது. 

இதனைத்தொடர்ந்து, துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2020-2021ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார். 

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வெளியான அறிவிப்புகள்.

235 கோடியில் மூன்று துறைமுகங்கள் விழுப்புரம் அழகான்குப்பம், செங்கல்பட்டு ஆலம்பாறை, நாகை ஆறுகாட்டுத்துறையில் புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன.

முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தில் நிதி 2.1 லட்சமாக உயர்த்தப்படும். பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திற்கு 3099 கோடியும் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தில் 500 கோடி ஒதுக்கீடு.

அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.

காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல், முதனிலை பணிகளுக்கு ரூ.700 கோடி.

நீர்பாசனம் மற்றும் நீர்வள ஆதார துறைக்கு ரூ.6991 கோடி.

1364 நீர்பாசன பணிகள் ரூ.500 கோடியில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும்.

குடிமராமத்து திட்டத்துக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் வடிகால்கள் சீரமைக்க ரூ.5,439 கோடி ஒதுக்கீடு.

ஊரகப் பகுதிகளை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த உருவாக்க 500 கோடி ஒதுக்கீடு.

11ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு 966 கோடி ஒதுக்கீடு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new scheme for 3 district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->