திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்.! கைதான முக்கிய புள்ளி.! - Seithipunal
Seithipunal


திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை நகை கடையின் பின்புறமாக சுவரில் துளைபோட்டு கொள்ளையர்கள் 2 பேர் உள்ளே சென்று அங்குள்ள 30 கிலோ எடைக்கொண்ட ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர மற்றும் பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்து சென்றார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.

இந்த சம்பவம் குறித்து, தனிப்படை அமைத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் திருவாரூரை சேர்ந்த மணிகண்டனை முதலில் கைது செய்திருந்தனர். மேலும், தப்பியோடிய சீராத்தோப்பு சுரேஷின் தாய் கனகவள்ளியை கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்த நகைகளையும் பறிமுதல் செய்தார்கள்.

மேலும், மணிகண்டன், கனகவள்ளி ஆகியோரை போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை செய்தார்கள். கைது செய்யப்பட்ட இருவரையும் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தினர்கள். அவர்களை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு திரிவேணி உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முரளி (26) என்பவரை திருவாரூரின் சீராத்தோப்பு பகுதியில் வைத்து போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இவர் கொள்ளையன் முருகனின் அண்ணன் மகன் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new robber caught in the case of lalitha jewellery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->