சாத்தான்குளமாக மாறியதா? பேரையூர் காவல் நிலையம்.. கொந்தளிக்கும் உறவினர்கள்..! - Seithipunal
Seithipunal


காவல் துறையினரின் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் பிணமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியை சார்ந்தவர் ரமேஷ். இவர் காதலித்து வந்த பெண்மணியை, கடந்த மாதம் காதல் திருமணம் செய்துள்ளார். காதல் திருமணத்தை எதிர்த்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் ரமேஷ் மற்றும் அவரது சகோதரரை காவல் துறையினர் அடிக்கடி விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில், நேற்று இரவும் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். 

ரமேஷ் மற்றும் அவரது சகோதரரை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்ற நிலையில், மறுநாள் காலையில் பேரையூர் மலை பகுதியில் ரமேஷ் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள மலையில் ரமேஷ் தூக்கில் தொங்கியதை கண்ட உறவினர்கள் ரமேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பாதவும், விசாரணையின் போது போலீசார் ரமேஷை அடித்து கொலை செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி தூக்கில் தொங்கி கொண்டிருக்கும் உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்ததும் புறப்பட்டு சென்ற மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித், இளைஞரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட சாப்டூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்கண்ணன், காவலர் புதியராஜா உள்ளிட்ட நான்கு காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், உசிலம்பட்டி கோட்டாச்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் உடலை காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new police investigation murder issue in madurai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->