தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு 1,430 கோடியில் புதிய திட்டம்..அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் தமிழக மக்கள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது வரலாற்றுச் சாதனை என தெரிவித்த முதல்வர். மேலும் புதிதாக அமையவுள்ள 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசின் பங்காக ரூபாய் 1,430 வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே நீலகிரி, திருப்பூர், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் என ஆறு மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளில் அமைக்க அனுமதியளித்த, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதற்கடுத்தபடியாக நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளுர், மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

இதையடுத்து மேலும் நான்கு மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரி கேட்டு தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. கடலூர், காஞ்சிபுரம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அரியலூர் மற்றும் கள்ளகுறிச்சி மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது, கடலூர் காஞ்சிபுரம் மாவட்டங்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விடுபட்ட மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஏற்கனவே அறிவித்த ஆறு மருத்துவக்கல்லூரிகளுக்கு ஓரிரு வாரங்களில் முதல்வர் அடிக்கல் நாட்டுவார் எனவும் புதிய மருத்துவக்கல்லூரிகள் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new medical colleges for tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->