தமிழக மக்களுக்கு வெளியான பிரம்மாண்ட அறிவிப்பு..மத்திய அமைச்சர் தலைமையில் அடிக்கல் நாட்டிய முதல்வர்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்ததது. அதன்படி தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் ஆணை வழங்கியது.

இதில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 10 மணி அளவில் அடிகல் நாட்டு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது

இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு மத்திய குடுமப நல மற்றும் சுகாதாரத் துறைஅமைச்சர் ஹர்சவர்த்தன் தலைமை தாங்கினார்.

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் பங்கேற்று புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், கலெக்டர் வீரராகவராவ் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

இந்த புதிய மருத்துவக்கல்லூரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் 22 ஏக்கர் பரப்பளவில் 345 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது. 
இன்று மாலை மூன்று மணிக்கு விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கும் மத்திய சுகாதாரத் துறைஅமைச்சர் ஹர்சவர்த்தன் தலைமை தாங்குகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த மருத்துவ கல்லூரிக்கு 380 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது குறிப்பிடக்கத்தக்கது.

அடிகல் நாட்டப்பட்டுள்ள இந்த மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு சார்பாக 40 சதவீதமும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new medical college stone foundation ceremony in ramanathapuram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->