ஒரே நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு மக்களுக்கு வெளியான அசத்தல் திட்டம்.! இன்று அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்ததது. அதன்படி தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் ஆணை வழங்கியது.

இதில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மார்ச் 1ம் தேதி  நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு மத்திய குடுமப நல மற்றும் சுகாதாரத் துறைஅமைச்சர் ஹர்சவர்த்தன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அமைய உள்ள 
மருத்துவ கல்லூரிகள் சுமார் 725 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், 338.76 கோடி மதிப்பீட்டில் நாமக்கலில் அமையவுள்ள புதிய அரசு மருதுவக்கல்லூரிக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் பங்கேற்று புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new medical college in namakkal district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->