கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் முருகவேல் மாற்றம்! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் ஆறு இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே உளவுத்துறை உதவி கமிஷனர் முருகவேல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாநகரில் கடந்த மூன்று நாட்களில் காந்திபுரம், ஒப்பணகார வீதி போன்ற ஆறு இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்டது. இதனால், மாநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக நான்காயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாநகரத்தின் பல்வேறு முக்கிய இடங்களில், கோவை மாநகர போலீசார் 2 ஆயிரம் பேர், பிற மாவட்டங்களில் இருந்து வந்த 1,500 பேர் மற்றும் அதிவிரைவுப்படையினர் 400 பேர், கமாண்டோ படையினர் 100 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கோயம்புத்தூரில் ஈடுபட்ட பாதுகாப்பு பணிகளை, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன், மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் மேற்பார்வையிட்டனர்.

இந்நிலையில், கோவை மாநகரத்தில் உளவுத்துறை உதவி கமிஷனராக இருந்த முருகவேல் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில், பார்த்திபன் நியமிக்கப்படுவதாக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new Intelligence officer in coimbatore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->