புதிய கல்விக் கொள்கை! தமிழகத்தில் இன்று நடந்து முடிந்த கூட்டம்!  - Seithipunal
Seithipunal


புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் நிபுணர் குழு இன்று கருத்து கேட்க உள்ளது

புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேசிய கல்வி கொள்கை இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். 

ஆனால் இந்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உயர்கல்வி நிபுணர் குழுவினர் தமிழகத்தில் உள்ள பல்கலை துணைவேந்தர் இடம் இரு தினங்களுக்கு முன் கருத்துக்களை கேட்டறிந்தனர். இந்த கருத்து கேட்பு கூட்டம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது.

இதனையடுத்து இன்று மாணவர்கள் பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம் இந்த நிபுணர் குழுவில் கருத்து கேட்புக் கூட்டம் ஆன்லைன் மூலம் இன்று காலை 9 மணி முதல் நடைபெற்று முடிந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new education policy meeting in tn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->