சின்னதம்பி யானையை, காட்டுக்குள் விரட்டும் முயற்சி தோல்வி…! அதை முகாமில் வைத்து பராமரிக்க முடிவு…! - Seithipunal
Seithipunal


 

டாப்சிலிப்பிலிருந்து, மீண்டும் தப்பி வந்து, உடுமலைப் பேட்டை பகுதியில் உள்ள விளை நிலங்கள் பகுதியில் சுற்றித் திரிகிறது, சின்னதம்பி யானை.

அதனை விரட்டி, காட்டுக்குள் விடுவதற்காக, வனத்துறையினர், எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தனர். ஆனால் முடியவில்லை.

அதே சமயம் சின்னதம்பி, தற்போது உடுமலைப்பேட்டை கண்ணாடிப்புத்துாரில் உள்ள கரும்புக்காட்டை அழித்து துவம்சம் செய்து வருகிறது. செந்தில் என்பவர், இரண்டு ஏக்கரில், கரும்பு பயிரிட்டுள்ளார். அதில், 1 ஏக்கர் கரும்பை, சின்னதம்பி ஸ்வாகா செய்து விட்டது.

மேலும், அருகில் உள்ள வாழைத் தோப்பில் புகுந்து, அங்குள்ள மரங்களை எல்லாம் பிடுங்கித் தின்கிறது. 12 தென்னை மரங்களை, வேரோடு பிடுங்கி தின்றுள்ளது. விளை நிலங்களில் உள்ள பயிர்களை எல்லாம் மிதித்து நாசம் செய்துள்ளது.

இதனால், இப்பகுதி விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.

இப்போது, தினசரி, இந்த யானையைப் பார்ப்பதற்காக, சுற்றுலாப் பயணிகள் போல, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதனால், இரவு நேரங்களில் சின்னதம்பி, இடம் மாறி விடுகிறது.

இது குறித்து, நீதி மன்றத்தில் முறையிட்ட தமிழக வனத்துறையினர், அந்த யானை சாதுவாக உள்ளது. காட்டு யானை போல, மனிதர்களின் வாழ்விடங்களை சேதப்படுத்துவது இல்லை. மனிதர்களைக் தாக்குவதும் இல்லை. உணவும், நீரும் இங்கு கிடைப்பதால், இந்தப் பகுதியை வி்ட்டுச் செல்ல மறுக்கிறது.

இதனை வனத்திற்குள் விட்டால், மீண்டும் வந்து விடும். எனவே, முகாமில் வைத்துப் பராமரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

English Summary

new decision in Chinnathambi elephant matter


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal