நீட் தேர்வால் நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த நிலையில்..மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குவதை முன்னிட்டு தேர்வு மையங்களில் தீவிர சோதனைக்குப் பிறகு மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகள் மத்தியில்  நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் இத்தேர்வை 3 ஆயிரத்து 842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுத உள்ளனர். தமிழ்கத்தில் 238 மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் தேர்வு எழுத உள்ளனர். அதில்அரசின் இலவச பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 8,130 பேரும் அடங்குவர். சென்னையில் 45 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது இதில் மாணவ மாணவியர் 22,500 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த நிலையில், ராணிப்பேட்டையில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தேர்வு அச்சத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சோளிங்கர் பாரதி நகர் பகுதியை சேர்ந்த சௌமியா, இன்று நடைபெறுகிற நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்றிரவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். காலையில் நீண்ட நேரமாகியும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்காததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் மதுரை, தருமபுரி, திருச்செங்கோடு சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டையில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet exam student try suicide in ranipettai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->