நீட் தேர்வு நுழைவு மதிப்பெண்கள் குறைக்க வாய்ப்பு.! அதிரடி திருப்பம்!! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு, மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்று கடைசி நேரத்தின் அறிவிப்பால் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளில் 450-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ் எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) போன்ற பட்டப் படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,038 இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 500 இடங்கள் இருக்கிறது. இதற்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் அரசு ஒதுக்கீட்டில் 142 இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 300-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்ப படாமல் இருக்கிறது.

விண்ணப்ப விநியோகம் தாமதம் : 

பிளஸ் 2 வில் எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனக் காத்திருந்த மாணவர்களுக்கு, கடைசி நேரத்தில் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்தார்கள்.

இந்த அறிவிப்பினால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாமதமாக விண்ணப்ப விநியோகம் மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது ஆகிய பல்வேறு காரணங்களே இந்த படிப்புகளில் இவ்வளவு இடங்கள் காலியாக இருக்க முக்கிய காரணமாக கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த நீட் தேர்வில் 107 மதிப்பெண்கள் வரை எடுத்த அனைவரும் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

நீட் மதிப்பெண்ணை குறைக்க :

யுனானி படிப்புக்கு உருது மொழி அவசியம் எனவே, அந்த படிப்புக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வரவில்லை. யுனானி படிப்பில்தான் அதிக இடங்கள் காலியாக உள்ளது. காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்காக, நீட் மதிப்பெண் சதவீதத்தை குறைக்கக் கோரி மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு கடிதம் எழுத இருக்கிறோம்” என்று தெரிவித்தார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet exam cutoff new idea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->