நேர்மையை வலியுறுத்தும் வகையில்...ஆளில்லா கடை..!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வாழ்க்கையில் அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு வலியுறுத்தும் விதமாக ‘ஹானஸ்ட் ஷாப்’ என்ற ஆளில்லா கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்தக் கடையை பள்ளி தலைமை ஆசிரியர் விமலா திறந்துவைத்தார். 

அப்போது, இந்தநிகழ்ச்சியில் பேசிய அவர், “வாழ்க்கையில் அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, ஆளில்லா கடை என்ற ‘ஹானஸ்ட் ஷாப்’  திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையில், பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கு தேவையான எழுதுபொருட்கள், பென்சில், தாள்கள், புத்தகங்கள் உட்பட பல்வேறு கல்வி உபகரணங்கள் அசல் விலையுடன் அலமாரியில் அடுக்கப்பட்டுள்ளது.

அதன் அருகிலேயே உண்டியல் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை மாணவர்களே எடுத்துக் கொண்டு அதற்கான விலையினை உண்டியலில் செலுத்திவிடும் வகையில் ஆளில்லா கடை ஹானஸ்ட் ஷாப் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near trichy school open honest shop for students


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->