திருப்பத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து மக்கள் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி, தமிழகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தண்டபாணி கோவில் மற்றும் சிவராஜ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்றுத் தலைமுறைகளாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி நடைபெற்றது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள மக்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக இடிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து, இன்று ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி நடைபெற உள்ளதாக நேற்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன் படி, இன்று காலை ஜே.சி.பி. வாகனங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்தனர். 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட மக்கள் திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அரசு பேருந்தை வழிமறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அந்த இடத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirupathur village public peoples against for remove encroachments


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->