தேனி அரசு மருத்துவமனையில் டோக்கன் முறையில் சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை, பொது மருத்துவம், தீக்காயம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

இதன் காரணமாக கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும், கேரளா மாநிலத்தில் உள்ள நெடுங்கண்டம், கட்டப்பனை, வண்டன்மேடு, குமுளி, கம்பம் மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

அப்படி வரும் வெளி நோயாளிகளுக்கு கணினி வழியாக பதிவு சீட்டு வழங்கப்படுகின்றன. இந்த சீட்டை பெற்றுச் செல்லும் நோயாளிகள் மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்வதற்காக வரிசையில் நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், நோயாளிகள் சிலர் வரிசையில் நிற்க முடியாமலும், ஒருவரோடு ஒருவர் உரசி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் சூழலும் உருவாகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக விதிக்கப்பட்ட கொரோனா தொற்றின் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதால் பெரும்பாலோனோர் முக கவசமும் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கூட்டமாக மருத்துவர் அறைக்குள் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு டோக்கன் முறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

இதனால், நோயாளிகள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவர் டோக்கன் எண் கூறும்போது அந்த நோயாளி மட்டும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த டோக்கன் முறை பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near theni Token treatment in kambam government hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->