காசி தமிழ் சங்கத்தில் பங்கேற்ற சீர்காழி மாணவி.! உற்சாக வரவேற்பில் உறவினர்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த நவம்பர் 16ஆம் தேதி மத்திய அரசு சார்பில் காசியில் தமிழ் சங்கமம் விழா தொடங்கி சுமார் ஒரு மாத காலம் நடைபெற்றது. அந்த விழாவில், தமிழ் இலக்கியம், கல்வி கலாச்சாரம், காசி மற்றும் தமிழ் கலாச்சாரமும், தென்னிந்தியாவின் கலாச்சாரம், நாட்டுப்புற கலை போன்றவற்றை காட்டும் எழுபத்தைந்து  அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி காசி மற்றும் தமிழ் நாட்டிற்கு இடையேயான பழமையான ஒரு தொடர்பை விளக்கும் வகையில் நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் இருந்து சுமார் 2500 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியை சேர்ந்த யோகா மாணவி சுபானு கலந்துகொண்டு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நூற்று எட்டு முத்திரைகளை காட்டி சிவதாண்டவம் நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி, சீர்காழிக்கு பெருமை சேர்த்துள்ளார். 

இதையடுத்து மாணவி சுபானு யோகாவில் உலக அளவில் பல சாதனைகள் படைத்தது சுமார் 270க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது ஆகும்.

இந்நிலையில், காசி தமிழ் சங்கமம் முடிவடைந்து மாணவி சுபானு சொந்த ஊரான சீர்காழி வந்தார். அவரை சீர்காழி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் சார்பாகவும் அவரது உறவினர்கள் மற்றும் சீர்காழி நகர பாஜக சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, வெகுவாக பாராட்டினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near seerkazhi young woman participate in kasi tamil sangam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->