சமூகத்தில் ஏற்றத்தாழ்வு என்ற ஒன்றே இருக்க கூடாது - அமைச்சர் இ. பெரியசாமி பேச்சு..! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்ட சட்டமன்ற தொகுதி சார்பில், தி.மு.க. இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டத்துக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமை வகித்த நிலையில், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்களான மதிமாறன், தமிழன் பிரசன்னா ஆகியோர் மாநில சுயாட்சி குறித்தும் திராவிட இயக்கத்தின் வரலாறு குறித்தும் எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் இ.பெரியசாமி உரையாற்றினார். அந்த உரையில்,

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் அறிவுரையின்படி, மாவட்டம் தோறும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்  நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த பாசறைக் கூட்டம் திராவிட இயக்கம் கடந்து வந்த பாதை மற்றும் இதற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் வரலாறு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். 

தமிழகத்தில் ஆதிக்க சக்தி தலைதூக்கி இருந்த காலத்தில் அவர்களிடம் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்த எளியவர்களுக்கு இந்த திராவிட இயக்கம் வாழ வழிவகை செய்தது. அதை விடாமல், தற்போது தொடர்ந்தும் செய்து வருகிறது. 

அனைத்து எளியவருக்கும் அதிகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும். இந்த சமூகத்தில் ஏற்றத்தாழ்வு என்ற ஒன்றே இருக்க கூடாது. அனைவரும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும். 

அனைத்து மக்களுக்கும் சமூகம், பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை கிடைக்கச் செய்வதுதான் திராவிட மாடலின் குறிக்கோளாகும். அதற்காக இந்த திராவிட அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது" என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dindukal dmk dravida model meeting minister periyasami speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->