நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால் ஆத்திரத்தில் கண்ணாடியை உடைத்த பள்ளி மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


நேற்று மாலை சென்னை பிராட்வேயிலிருந்து அய்யப்பன்தாங்கல் நோக்கி மாநகர பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. இந்த பேருந்தை ஓட்டுனர்  ஆண்டாள் பிள்ளை என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக செல்வகுமார் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், இந்த பேருந்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்து விளைவிக்கும் வகையில் பயணம் செய்தனர். 

இதைப்பார்த்த பேருந்து நடத்துனர் மாணவர்களை கண்டித்துள்ளார். ஆனால் மாணவர்கள் அதனைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர் கே.கே நகர் ராஜமன்னார் சாலை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் அனைவரையும் கீழே இறக்கி விட்டார். 

நடுவழியில் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் திடீரென பேருந்தின் மீது சரமாரியாக கல் வீச்சு நடத்தினர். இந்த தாக்குதலில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. 

இருப்பினம், பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், பேருந்து மீது கல்லை வீசிவிட்டு தப்பி ஓடிய மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai school student attack government bus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->