ஆசிரியர் தகுதித் தேர்வு : அரசாணையை நீக்க கோரி உண்ணாவிரத போராட்டம்..!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதற்கு வரும் டிசம்பர் மாதம் போட்டி தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, முன்பு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் வேளையில் சேருவதற்கு மற்றொரு தேர்வை எழுத வேண்டும் என்றும், வரும் டிசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வும் நடைபெறும் என்றும் தமிழ்நாடு தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அப்போது, அரசாணை 149 -ஐ நீக்க கோரி ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியிட்டு நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இந்தாண்டு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. இதைக் கண்டிக்கும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில், அரசாணை 149 -ஐ நீக்கம் செய்ய வேண்டும் என்று பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தி வருகின்றனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai govt order 149 Delete request strike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->