செங்கல்பட்டு || முன்பக்க படியில் தவறி விழுந்த மாணவன்.! பின்பக்க டயரில் உயிரிழந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாக பள்ளிக் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கி செல்வதால் கீழே விழுந்து உயிரிழக்கின்றனர். மாணவர்கள் எந்த விதி முறையையும் பின்பற்றாமல் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வது தான் இந்த விபத்துகளுக்கு காரணம். 

இதையடுத்து, மாணவர்கள் பேருந்து நிற்கும்போது ஏறாமல் புறப்படும் போது ஓடிச்சென்று பேருந்தில் ஏறுவது மற்றும் ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு பயணம் செய்வது போன்ற ஆபத்தான வேலைகளையே செய்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட சில ஊர்களில் பேருந்து சேவைகள் மிக குறைவாக இருப்பதால் மாணவ மாணவிகள் வேறு வழியில்லாமல் படிக்கட்டில் பயணம் செய்கிறார்கள்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்த போது மேலகோட்டையூர் பகுதியில்  பேருந்தில் முன்பக்க படியில் தொங்கியபடி சென்ற 11ம் வகுப்பு மாணவன் கீழே தவறி விழுந்ததில் பின்பக்க டயரில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதன் பின்னர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த மாணவன் பெயர் யுவராஜ். இவர் மாம்பாக்கம் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது தெரியவந்தது. மாணவர்களின் இதுபோன்ற விபரீத செயலால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இழந்து துடி துடிக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chengalpattu school student died in govt bus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->