40 இலட்சம் மரங்களை வளர்த்த, மரம் கருப்பையாவின் பரிதாப நிலை.. 5 மகள்கள் இருந்தும் தவிக்கும் சோகம்.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 90). இவரை மரம் கருப்பையா என்று கூறினால் அனைவருக்கும் தெரியும். கடந்த 40 வருடமாக அரியலூர், திருச்சி, பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களுக்கு நடந்து சென்று மரம் நடுவதை தனது வாழ்நாள் பணியாக செய்து வந்துள்ளார். 

அதிகாலை நேரத்தில் வீட்டிலிருந்து பத்து மரக்கன்றுகளுடன் புறப்படும் கருப்பையா, சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்துள்ளார். இதனைப் போன்று கடந்த 40 வருடங்களாக 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வந்த நிலையில், இவரது சேவையை பாராட்டி இயற்கையின் காதலர் என்றும், மரம் கருப்பையா என்றும் பல்வேறு பெயர்களை வைத்து அழைத்துள்ளனர். 

இந்நிலையில், தனது வாழ்நாள் முழுவதும் மரங்களை வளர்க்க அர்ப்பணித்துக் கொண்ட மரம் கருப்பையா, தற்போது முதுமை காரணமாக வீட்டில் முடங்கி இருப்பதால் வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார். இவருக்கு 5 மகள்கள், ஒரு மகன் இருந்தும் அவரை கண்டுகொள்ளாததால் முதுமை வயதில் தனிமையில் தவித்து வருகிறார். 

90 வயதாகும் கருப்பையா வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார். மேலும், அவருக்கு வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மேலும் வறுமை வாட்டி வதைத்துள்ளது. இவரது நிலையை அறிந்த அப்பகுதி விவசாயிகள் அத்தியாவசிய தேவை பொருட்களான அரிசி மற்றும் பருப்பு பொருட்களை கொடுத்து வரும் நிலையில், அவற்றை வாங்காமல் மரக்கன்றுகள் நடுங்கள் என்று அறிவுரை கூறி வருகிறார். இதனையடுத்து மரம் கருப்பையாவிற்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை மீண்டும் வழங்க உதவி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nature Lover Ariyalur Maram Karuppaiya Want Help


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->