காவிரி துலா உற்சவத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி! பக்தர்கள் பரவசம்!  - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை 16.11.19 : மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி நிகழ்ச்சியை முன்னிட்டு, பரதநாட்டிய கலைநிகழ்ச்சி, மேற்கத்திய இசையுடன் கூடிய பரதநாட்டிய ப்யுஷன் உள்ளிட்ட நடனங்களை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். அதனை முன்னிட்டு இன்று துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி நடைபெற்றது. 

தீர்த்தவாரிக்குப்பிறகு, மயூரநாதர், அபயாம்பிகை ஆகியோர் துலா உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு துலாகட்ட மண்டபத்தில் அபிநயா நாட்டியப்பள்ளி மாணவியரின் பரத நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் அறுபடை முருகன் ஞானப்பழம் சாப்பிடும் நிகழ்ச்சி, சண்முகா பவுத்துவம், மேற்கத்திய இசையுடன், கர்நாடக இசைக்கு பரதநாட்டியமாடும் ப்யுஷன் நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நாட்டியங்களை மாணவிகள் நிகழ்த்தினர். இரவில் சுவாமியை தரிசனம் செய்த ஏராளமான பக்தர்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். 

செய்தியாளர் : மணி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nattiyanjali in Mayuranathar Temple Festival


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->