தேசிய கீதத்தில் பிழை.! 3  ஊழியர்களுக்கு நோட்டீஸ்!! கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சாடல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பாடநூல் கழகம் புதிதாக அச்சிட்டு வழங்கப்பட்ட ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தேசிய கீதம் எழுத்துப் பிழைகளுடன் தவறாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

புதிய படத்திட்டத்தில்  1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத் திட்டங்கள் புதிதாக கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில் 1-ஆம் வகுப்பு மற்றும் 2-ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள தேசிய கீதத்தில்  ஜன கண மன என தொடங்கும்  பல வார்த்தைகள் தவறாக அச்சிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து சில சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். தேசிய கீத பாடலில் திராவிட உத்கல வங்கா என்ற வரியில் வங்கா என்தற்கு பதில் பங்கா என அச்சிடப்பட்டுள்ளது. அதேபோன்று உச்சல ஜலதி தரங்கா என்ற வரியில் ஜலதி என்பதற்கு பதில் சலதி என அச்சிடப்பட்டுள்ளது. மேலும் ஜன கண மங்கள தாயக ஜெயகே என்ற வரிக்குப் பதில் பாடலின் முதல் வரியான ஜன கண மன அதிநாயக ஜய ஹே என்பதே என அச்சிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் 3 ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

national anthem printing mistake 3 workers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->