நானும், அப்பாவும் மூட்டை தூக்கி.... நூதன கொள்ளையால் பணத்தை இழந்த வாலிபர்.! மக்களே உஷார்.!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் ராமசாமி தெரு பகுதியை சார்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் தனியார் கல்லூரியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் மனோஜ் (வயது 19). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். 

இந்நிலையில், இவர் மத்திய அரசின் வல்லபாய் படேல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், மனோஜிற்கு அலைபேசியில் மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் கல்வி உதவித்தொகை தொடர்பாக விபரம் கேட்பதாக கூறி ஏ.டி.எம் எண்களை பெற்று ரூ.23 ஆயிரம் பணத்தை நூதன முறையில் திருடியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர், மீண்டும் அந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசுகையில், தகாத வார்த்தைகளால் திட்டி பேசியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இந்த விஷயம் குறித்து மாணவர் தெரிவிக்கையில், " கல்வி உதவித்தொகை என்பதால் ஏ.டி.எம் எண்ணை கொடுத்தேன். கல்வியில் கட்டணம் செலுத்த நானும், எனது தந்தையும் கடந்த 3 மாதமாக மூட்டைதூக்கி சம்பாரித்த பணம். இப்போது கல்வி கட்டணம் செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் எனது பணத்தை மீட்டு தர வேண்டும் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal youngster cheated by fraud gang


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->