நாமக்கல்: நீட் தேர்வெழுதிய மாணவி மாயம்.. பெற்றோர்கள் கண்ணீர்.. காவல்துறை விசாரணை.! - Seithipunal
Seithipunal


இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவி, வீட்டில் இருந்த மாயமானதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் சின்ன அரியகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவரது மகள் ஸ்வேதா (வயது 19). இவர் கடந்த 2019 ஆம் வருடத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த நிலையில், கடந்த வருடம் முதல் முறையாக நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து, மீண்டும் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த மாணவி ஸ்வேதா, கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் இரண்டாவது முறையாக கலந்து கொண்டு நீட் தேர்வு எழுதிய நிலையில், தேர்வு எழுதிய பின்னர் மன உளைச்சலோடு இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில், இன்று காலையில் தீடீரென மாணவி வீட்டில் இருந்து மாயமாக, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய ஸ்வேதாவின் தந்தை நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Rasipuram Girl Student Swetha Aged 19 Completed NEET Exam Now She Missing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->