விபத்தில் சிக்கியவர்கள் வலியால் கதற, பொறுமையாக ஜாதியை கேட்டு தகவல் சேகரிப்பு.. நாமக்கல்லில் அதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த கட்டிட தொழிலாளர்கள் இராமச்சந்திரன் மற்றும் பெரியசாமி. இவர்கள் இருவரும் பணி நிமித்தம் காரணமாக கோயம்புத்தூருக்கு தங்களின் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டு இருந்தனர். 

இதன்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருக்கும் போது, முன்னாள் சென்று கொண்டு இருந்த கண்டைனர் லாரியை முந்த முயற்சி செய்கையில் விபத்தில் சிக்கினர்.

கண்டைனர் லாரியின் டயர் ராமச்சந்திரனின் காலில் ஏறி இறங்கியது, மேலும், பெரியசாமிக்கு கால்கள் முறிந்தது. இருவரும் இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கவே, சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அத்தியப்பன், இருவரையும் சிகிச்சைக்கு விரைந்து அனுப்பிக்கொண்டே தகவலை சேகரிக்காமல், அலட்சியமாக செயல்பட்டுள்ளார். 

இருவரும் உடலில் காயத்தின் வலியால் சார் சிகிச்சைக்கு அனுப்புங்க என்று வலியால் கத்தவே, அவர்களின் ஊர் மற்றும் பெயரை விசாரித்த அதிகாரி, எந்த ஜாதி? என்று கேட்கிறார்., அவரும் ஜாதியை சொன்னவுடன், உடன் வந்தவரின் ஜாதி குறித்தும் விசாரணை செய்கிறார். 

அவரும் எனது உறவினர் தான் என்று கூறவே, பின்னர் அனைத்து தகவலையும் சேகரித்து பொறுமையாக அவசர ஊர்தியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகவே, சமூக வலைத்தளங்களில் அதிகாரியின் மெத்தனப்போக்குக்கும், ஜாதி குறித்த கேள்விக்கும் கடும் கண்டனம் எழுந்தது. 

இதனையடுத்து, இது தொடர்பாக காவல் அதிகாரிகள் உத்தரவின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் அத்தியப்பன் நாமக்கல் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். விபத்தில் காயமடைந்தவர்கள் ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Police SSI Talks about Accident Injured person Caste Issue 24 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->