பட்டம் விட்ட நூலால் அந்தரத்தில் சிக்கி தவித்த காகம்... காப்பாற்றிய காவல்துறை.!! வைரலாகும் காணொளி காட்சி.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஊரடங்கு அதிரடியாக அமலானது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கத்திற்கு 2,162 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. 27 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரசால் 61 பாதிக்கப்பட்டுள்ளனர். 49 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். அங்குள்ள பகுதியில் காவல் துறையினர் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த சமயத்தில், அங்குள்ள காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அலைபேசி டவர் கோபுரத்தில் பட்டத்தின் நூலில் காகம் ஒன்று சிக்கி விடுபட இயலாமல் தவித்துள்ளது. இதனைக்கண்ட சக காகங்கள் அங்கும் இங்குமாய் அலறியபடி சுற்றியுள்ளது. 

இதனையடுத்து இதனை கண்ட மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காகத்தை பத்திரமாக மீட்டுள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகளானது வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal police save crow life


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->