நாமக்கல்: கோவில் திருவிழாவில் இருதரப்பு மோதல்.. சாலைமறியல் போராட்டத்தில் அவசர ஊர்திக்கு மட்டும் அனுமதி.! - Seithipunal
Seithipunal


பரமத்தி வேலூரில் நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில், இருவேறு சமூக இளைஞர்கள் திடீரென தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் தெற்கு தெரு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. இதில் ஒரு குழுவை சேர்ந்த மக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, மற்றொரு குழுவைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆடியபடியே தேருக்கு சன்னக்கட்டை போட்டு வந்தனர். 

இதன்போது, அம்மனின் தேர் கோவிலை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில், சன்னக்கட்டை போட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள், சிலர் தங்களது சமூகம் மற்றும் கட்சி கொடியை எடுத்து தேரில் ஏறியதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து நமது அடையாளத்தை காட்ட வேண்டும் என்று மற்றொரு எதிர் தரப்பும், மரத்தின் மீது மற்றும் அங்கிருந்த கோவிலின் மீது ஏறி நின்று தங்களின் கட்சிக்கொடி மற்றும் சமூகக்கொடியை பிடித்து அசைக்க தொடங்கினர். 

இதில், தேரை வடம்பிடித்து இழுத்து வந்தவர்கள் குழுவில் உள்ள இளைஞர் தேரில் ஏற முயன்றதால் ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர், கொடியுடன் வந்த இளைஞரை விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர். இதனையடுத்து, அங்கு கூடியிருந்த பெரியவர்கள், காவல்துறையினர் அந்த இளைஞரை மீட்டு வந்தனர். 

மேலும், அந்த இளைஞரை இரும்பு கம்பியால் எதிர்த்தரப்பு தாக்கியதில், அவர் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளைஞரின் தரப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், போராட்டத்தின் போது சாலையில் தடுப்பு அமைத்து தடையை ஏற்படுத்திய நிலையில், அவ்வழியாக திடீரென அவசர ஊர்தி ஒன்று வந்துள்ளது. இதனைக்கண்ட போராட்டக்குழுவினர் அவசர ஊர்திக்கு மட்டும் வழிவிட்டு, அந்த அவசர ஊர்தியை விரைந்து அனுப்பி வைத்தனர். பதற்றத்தை தணிக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலையில், தேர் கோவிலுக்கு வர வேண்டும் என்பதால் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Paramathi Velur Gang Fight Protest Protesters Give way of Ambulance 31 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->