கிட்னி திருட்டு விவகாரம்: தமிழகத்தில் பிரபல மருத்துவமனை செயல்பட தடை! அதிரடி நடவடிக்கை!
namakkal kidney issue Erode hospital ban
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கிட்னியை ரூ.6 லட்சத்திற்கு விற்றதாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
வீடியோவைத் தொடர்ந்து கலெக்டர் துர்காமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் பள்ளிபாளையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சந்தேகப்படும் ஈரோடு மற்றும் திருச்சி தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் வகையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழும் இந்த உத்தரவின் அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கல்லீரல் விற்பனை சம்பந்தமாக அதிகாரிகள் சமீபத்தில் மருத்துவமனையில் சோதனை நடத்தினர். அதன்பின் தொடர் விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையின் செயல்பாடுகளைத் தற்காலிகமாகத் தடைசெய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
English Summary
namakkal kidney issue Erode hospital ban