திரையால் வென்றவர்கள் திரைத்துறையை பாதுகாக்கும் இலட்சணம் இதுவா?.. பாரம்பரியமான திரையரங்கம் தரைமட்டமான சோகம்.!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் நகரின் பெரிய அடையாளமாக திகழ்ந்த 71 வருட பிரம்மாண்ட ஜோதி திரையரங்கம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி சினிமா ரசிகர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

கடந்த 1980 ஆம் வருடத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திற்கும் திரையரங்குகள் பெரும் அடையாளமாக திகழ்ந்தது. சென்னை உதயம், மதுரை சென்ட்ரல், நெல்லை ராம் சினிமாஸ் என்று அந்தந்த ஊர்களின் அடையாளமாக திரையரங்குகள் திகழ்ந்தது. நாமக்கல் மாநகரை பொறுத்த வரையில் ஜோதி திரையரங்கம் அடையாளமாக இருந்தது. 

இந்த காலகட்டத்தில் தொலைக்காட்சிகளின் ஆதிக்கத்தால் சிறிய திரையரங்கு முதல் டென்ட் கொட்டா வரை பல திரையரங்குகள் காணாமல் போயுள்ள நிலையில், ஜோதி திரையரங்கமும் அப்படி சென்றுள்ளது. இந்த திரையரங்கம் நாமக்கல் நகரத்தின் மையப்பகுதியில், கவிஞர் ராமலிங்கம் பிள்ளை வீதியில் கடந்த 1949 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 

1987 ஆம் வருடத்தில் இந்த திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு, 1500 பேர் ஒரு காட்சிக்கு அமர்ந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்டமான திரையரங்கமாக உருவாக்கப்பட்டது. இந்த திரையரங்கத்தின் மாடியில் கார் பார்க்கிங் வசதியும் உருவாக்கப்பட்டது. என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் - சிவாஜி, கமல் - ரஜினி, விஜய் - அஜித் என்று கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகள் கொண்ட நடிகர்களின் படம் இங்கே வெளியாகியிருந்தது. 

பொங்கல், தீபாவளி என்று எந்த பண்டிகை என்றாலும் இந்த திரையரங்கில் கூட்டம் கட்டுக்கடங்காது இருக்கும். இந்த நிலையில், திரையரங்குகளுக்கு இருக்கும் வரவேற்பு குறைந்ததன் காரணமாக கடந்த 2005 ஆம் வருடத்தில், நவீனமயமாக்க இயலாமல் ஜோதி திரையரங்கம் மூடப்பட்டது. இதன்பிறகு பொலிவிழந்த ஜோதி திரையரங்கம், கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தரைமட்டமாக்கப் பட்டுள்ளது.

திரைத்துறையில் இருக்கும் பலரும் நாங்கள் திரைத்துறையை வளர்க்கிறோம்.. புதுப்பிக்கிறோம் என்று புதுப்புது வசனங்களை போறபோக்கில் பேசிவிட்டு, காற்றில் தூவிவிட்டு செல்லாமல், தங்களின் காசுகளை தேவையில்லாத விஷயங்களுக்கு செலவு செய்யாமல், உங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த திரையரங்குகளை இயன்றளவு பாதுகாக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Jyothi Cinemas destroyed


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->