கடும் வெயில் எதிரொலி.. முட்டைக்கோழிகள் உயிரிழப்பால், முட்டை விலை மீண்டும் உயர்வு.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மண்டலத்தில் 445 காசுகளாக இருந்து வந்த முட்டை கொள்முதல் விலையானது, 15 காசுகள் உயர்த்தப்பட்டு 460 காசுகளாக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 15 காசுகள் முட்டைக்கு உயர்த்தப்பட்டு, 460 காசுகள் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் முட்டை விலை 495 காசுகளாகவும், ஐதராபாத்தில் 425 காசுகளாகவும், விஜயவாடாவில் 431 காசுகளாகவும், மும்பையில் 476 காசுகளாகவும், மைசூரில் 476 காசுகளாகவும், பெங்களூரில் 475 காசுகளாகவும், கொல்கத்தாவில் 485 காசுகளாகவும், டெல்லியில் 413 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், முட்டைக்கோழி கிலோ ரூ.75 ஆகவும், கறிக்கோழி ரூ.123 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முட்டை விலை உயர்வு தொடர்பாக தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்கட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் பேசுகையில், 

" கடந்த இரண்டு வாரமாக நாமக்கல் பகுதியில் 105 டிகிரி வெப்பம் நிலவி வந்தது. இதனால் கோழிகள் வெயிலை தாக்குப்பிடிக்க இயலாமல் 15 இலட்சம் கோழிகள் உயிரிழந்தது. வெப்பத்தால் கோழிகள் எடுக்கும் தீவனத்தை அளவும் குறைந்துள்ளது. 

இதனால் பண்ணையில் 1 கோடி அளவிலான முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. கோழித்தீவனத்தின் மூலப்பொருள் சோயா புண்ணாக்கு கிலோ ரூ.35 இல் இருந்து ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. இதனால் முட்டையின் விலை உயர்ந்துள்ளது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.. 

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை, இயற்கையான பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தை பாதுகாத்திடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Egg Price High Reason 13 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->