நாமக்கல் குழந்தை கடத்தல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமின்! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் மாதம் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை பாக்கியம் இல்லாத ஒருவரிடம் நாமக்கல் அருகே ராசிபுரத்தில் உள்ள ஓய்வு பெற்ற நர்ஸ் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் அமுதா, குழந்தைகளை விற்பனை செய்து வருவது இதுதொடர்பான புகாரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அமுதாவை கைது விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர் குழந்தைகளை பணத்திற்கு விற்றது உறுதியானது. அந்த குழந்தை கடத்தல் வழக்கு குறித்து நாளுக்குநாள் அதிர்ச்சி தகவல் வெளியாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தி வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்திய காவல்துறையினர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்தனர். மேலும், ஆரம்ப சுகாதார அலுவலக வாகன ஓட்டுநர் முருகேசனும் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கின்   விசாரணை வெளிமாநில, வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு விசாரித்து வந்தது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி குழந்தை கடத்தலில் சம்மந்தப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, இவரின் கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர் லீலா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமின் வழங்கி நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி லதா உத்தரவு.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

namakal child kidnap


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->