கேடுகெட்ட மகனை காப்பாற்ற, ஆதாரத்தை அழித்த தந்தை?.. காசியின் தந்தையை தூக்கிய சிபிசிஐடி..!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணேசபுரம் பகுதியை சார்ந்த சுஜி என்ற காமுக காசி (வயது 26), பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளான். இந்த விஷயம் தொடர்பாக பெண் மருத்துவர் உட்பட பல பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காமுகனை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், காசிக்கு உடந்தையாக இருந்த இன்னொரு காமுகன் டிசைன் ஜீனோ (வயது 19) என்பவனையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது. மேலும், இவர்கள் இருவரை தவிர்த்து கணேசபுரம் பகுதியை சார்ந்த தினேஷ் என்பவனையும் காவல் துறையினர் கைது செய்தனர். கணேஷிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காமுக கும்பல்கள் தங்களை வசதியான குடும்ப இளைஞருடன் தொடர்பை அறிமுகம் செய்து, விலையுயர்ந்த கார்களில் வளம் வந்ததும், இதே காரிலேயே இவர்களிடம் சிக்கும் பெண்களை வைத்து பல ஊர் ஊராக சுற்றி, பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வந்ததும், பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து பணம் பறிப்பு மற்றும் ஆணைக்கு இணங்க வைப்பது போன்ற நடவடிக்கையும் அரங்கேறியுள்ளது. தங்களின் ஆசைக்கு இணங்காத பெண்களை பல வகைகளில் காமுகன்கள் மிரட்டி வந்த நிலையில், தினேஷின் கூட்டாளி குறித்த விபரமும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் மற்றும் கொடுமைப்படுத்தி பணம்பறித்த வழக்கில் நாகர்கோவில் காசியின் தந்தையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், மகன் தொடர்பான தடயத்தை அளித்த புகாரில் அவனது தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagarcoil Kasi case investigation kasi Father arrest by police


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->