பெண் காவல் ஆய்வாளரின் இரண்டாவது கணவர் கார் ஓட்டுநர்.. டி.ஐ.ஜி என ஏமாற்றி அரங்கேற்றிய நாடகம்.. விசாரணையில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புதிய கடற்கரை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் தனியார் சூப்பர் மார்க்கெட்டுக்கு, கடந்த 24 ஆம் தேதி காரில் வந்த மர்ம நபர் தனக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு, தன்னை டி.ஐ.ஜி என்றும், நான் கூப்பிட்டால் நாகப்பட்டினம் எஸ்.பி உடனே வருவார் என்றும், என்னிடமே வாங்கிய பொருளுக்கு காசு கேட்கிறாயா? என்று மிரட்டியுள்ளார். 

இதேபோல, கடந்த 28 ஆம் தேதி வெளிப்பாளையம் தம்பிதுரை பூங்கா அருகில் பழக்கடை நடத்தி வரும் ரவி என்பவரிடம், ரூபாய் ஆயிரத்திற்கு பணம் வாங்கிவிட்டு தன்னை டி.ஐ.ஜி என்று கூறி விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது. இந்த புகார்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் தியாகராஜன், இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் என்பதை உறுதி செய்துள்ளார். 

இதனையடுத்து காவல் அதிகாரியாக நடித்த மதுரை பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரை விசாரணைக்காக வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு மகேஷ் தன்னை காவல் ஆய்வாளர் கவிதா என்பவரின் உறவினர் என்றும், நான் வேலை ஏதும் செய்யாமல் சும்மா இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர் இந்த விஷயம் தொடர்பாக மகேஷ் கவிதாவிற்கு தகவல் தெரியப்படுத்த, காவல் அதிகாரி தியாகராஜனை தொடர்பு கொண்ட கவிதா, மகேஷை தனது கணவர் என்று கூறியுள்ளார்.

மேலும், அவரது பெயர் மகேஷ் என்ற மகேந்திரவர்மன் என்றும், கணவர் குஜராத்தில் டி.ஐ.ஜியாக இருக்கிறார் என்றும், தற்போது அறுவை சிகிச்சைக்காக ஊருக்கு வந்துள்ளார். அவரை எப்படி நீங்கள் விசாரணைக்கு அழைக்க முடியும? என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். மேலும், எஸ்.பியிடம் பேசிவிட்டு லைனில் வருவதாகவும் கூறியுள்ளார். இந்த மிரட்டலுக்கு பயப்படாத காவல் அதிகாரி தியாகராஜன், யாரிடம் சொன்னாலும் பரவாயில்லை., விசாரணைக்கு வரச்சொல்லுங்கள் என்று அதிரடியாக கூறியுள்ளார். 

தற்போது 50 வயதாகும் காவல் ஆய்வாளர் கவிதா, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், கடந்த 7 வருடங்களுக்கு முன்னதாக திருப்போரூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியபோது, அவரிடம் ஓட்டுனராக பணியாற்றி வந்த மகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வருவதும், தற்போது பணி உயர்வு பெற்று நாகப்பட்டினத்தில் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள கவிதா, மகேஷின் பெயரை மகேந்திரவர்மா என்று மாற்றிக்கொண்டதும் தெரியவந்தது. 

இதனை வைத்து பல இடங்களில் மோசடி செய்து கைவரிசையை காட்டியதும் அம்பலமானது. மேலும், காவல்துறையில் உள்ள சிலரிடம் பதவி உயர்வு வாங்கி தருவதாக மகேந்திரன் என்ற மகேஷ் மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இதன் பின்னர் வெளிப்பாளையம் காவல்துறையினரால் மகேஷ் கைது செய்த நிலையில், காவல் ஆய்வாளர் கவிதாவிடம் உயரதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam Police Inspector Kavitha Forgery Issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->