கணவனோடு சேர்ந்து மிரட்டி கையூட்டு வாங்கிய காவல் அதிகாரி.. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்கவும், மேலும் பரவாமல் இருக்கவும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் மக்களுக்காக தங்களின் உயிரையும் மதிக்காது தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 

இந்த நேரத்தில் காவல் துறையினரின் பணிகளால் மக்களின் மனதில் காவல்துறை நல்ல இடத்தை பெற்ற நிலையில் தொடர்ந்து பல விதமான மகிழ்ச்சி வெளிப்பாடுடன் அதிகரித்து வரும் நிலையில், ஒரு சில காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் காவல்துறையினருக்கு பெரும் சோகம் ஏற்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி மகளிர் காவல் நிலைய அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஸ்ரீபிரியா. 

இவர் சீர்காழியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இவரது கணவரும் காவல்துறை அதிகாரி ஆவார். இவரது கணவர் சோமசுந்தரம் திருவாருர் மாவட்டத்தில் உள்ள எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். சோமசுந்தரம் தற்போது மருத்துவ விடுமுறையில் இருக்கிறார். இந்த நேரத்தில், கடந்த 11 ஆம் தேதியன்று காவல் சீருடையில் கணவருடன் சொந்த காரில் சீர்காழிக்கு சென்ற ஸ்ரீபிரியா, கடைகளை மூட கூறி வலியுறுத்தியுள்ளார். 

மேலும், அங்குள்ள மெடிக்கல்லில் ரூ.2 ஆயிரம் கையூட்டு கணவரின் மூலமாக பெற்றுள்ளார். இதனைப்போன்று அங்குள்ள மாளிகைக்கடைகளிலும் கையூட்டு பெறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கவனித்த அப்பகுதி மக்கள், கடந்த 12 ஆம் தேதி மீண்டும் வசூல் வேட்டைக்கு வந்த அதிகாரிகளின் செயல்களை விடியோவாக பதிவு செய்து தஞ்சாவூர் சரக காவல் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரி, கையூட்டு வாங்கிய தம்பதிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam police couple Bribery police higher official order to suspend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->