கொரோனா பிடி.. மீண்டு வந்த நபரை ஊர்வலமாக அழைத்து வந்த மக்கள்.. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பூரண நலன் பெற்றவர்களை இல்லங்களுக்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை, மக்கள் ஊர்வலமாக வரவேற்று அழைத்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியை சார்ந்தவர் டெல்லிக்கு சென்று திரும்பி வந்துள்ளார். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, மயிலாடுதுறை மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மேற்கொண்ட சோதனையில் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

இவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், பூரண நலன் பெற்றதை அடுத்து, நேற்று முன்தினத்தின் போது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும், மருத்வவர்கள் சில நாட்களுக்கு தனிமையில் இருக்க கூறி அறிவுரை வழங்கி வானுப்பி வைத்துள்ளனர். இவர் சீர்காழி வருவதை அறிந்த அப்பகுதி மக்கள் 15 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து, சால்வை அணிவித்து ஊர்வலகமாக அழைத்து வந்துள்ளனர். 

இது குறித்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகவே, ஊரடங்கை மீறி சென்றது மற்றும் மருத்துவரின் அறிவுரையை மீறியது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam old man corona positive discharge return home relatives create violent


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->