ஓட்டலில் முண்டியடித்து போலீஸ் ஸ்டேஷனில் மண்டி.. ரசிக புள்ளிங்கோஸ் அடாவடியும், ஆப்பும்.! - Seithipunal
Seithipunal


கர்ணன் படம் பார்க்கச் சென்ற புள்ளிங்கோஸ் உணவகத்துக்கு சாப்பிட சென்று, ஊழியரின் காதினை கத்தியால் அறுத்து புரட்சி செய்த சம்பவம் நடந்துள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெள்ளியம்பாளையம் தேவி திரையரங்கில், கர்ணன் படம் பார்க்கச் சென்ற ரசிகர்கள் அருகிலுள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். திரைப்படம் திரையிடுவதற்குள் தோசை சாப்பிட்டு விட்டு செல்லும் திட்டத்துடன் உணவகத்திற்கு வந்த நிலையில், உணவக உரிமையாளர் மோகனிடம் விரைவாக தோசை கொண்டுவரச் சொல்லி கூறியுள்ளனர். 

இதன்போது சப்ளையர் முன்னதாகவே ஆர்டர் செய்திருந்த மற்றுமொரு டேபிளில் தோசையை கொடுக்கவே, படம் ஆரம்பித்து விடுவார்கள் என்று சொல்லியபடி தோசை பக்கத்து டேபிலுக்கு எதற்கு கொடுத்தீர்கள்? என்று கடை ஊழியரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். 

இதுமட்டுமல்லாது, ஆர்டர் செய்த தோசை எப்படி வேறொரு கொடுக்கலாம் என்று இருவரும் ரகளையில் ஈடுபட்ட நிலையில், ஆத்திரத்தில் கத்தியை எடுத்து சப்ளையர் பாஸ்கரனின் காதை வெட்டியுள்ளனர். 

இதில், அவரது இடது பக்க காது இரண்டாக கிழிந்த நிலையில், காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மேலும், அங்கிருந்து ரகளையில் ஈடுபட்ட இருவரும் தப்பி செல்லவே, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் இருவரும் வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவுடி அருண்குமார் மற்றும் சப்பை சிவா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam Karnan Movie Fans Murder Attempt Hotel Supplier 16 April 2021 Culprits Arrest


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->