#Breaking: நாகை துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அரபிக்கடல் பகுதியில் உருவாகிய டவ் தே புயலானது குஜராத் மாநிலத்தை தாக்கி பின்னர் வலுவிழந்தது. இந்நிலையில், இந்த புயல் கரையை கடந்து சென்ற மறுநாளே, வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை மையம் அறிவித்தது. 

புயலை தொடர்ந்து கண்காணித்து வந்த இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகுவதை உறுதி செய்து அதற்கு யாஷ் புயல் என்றும் பெயர் சூட்டியது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை செய்தியில் " மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நீடித்து வருகிறது. 

இது மேலும் வலுவடைந்து 23 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 24 ஆம் தேதி புயலாகவும் மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, ஒடிசா மற்றும் பங்களாதேஷ் கரையை 26 ஆம் தேதி கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்தில் முதல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பொதுவாக முதல் எச்சரிக்கை கூண்டு புயல் உருவாகக்கூடிய வானிலை சூழலை உணர்த்தும் வகையில் துறைமுகத்தில் ஏற்றப்படும். இதனால் துறைமுகத்திற்கு பாதிப்பு இல்லை என்றாலும், பலமான காற்று வீசும் என்ற செய்தியையும் இது குறிக்கும்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam harbor First Warning Storm Flag 23 May 2021 6 PM


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->