மத்திய அரசின் விரோத போக்கு.. சீமான் தலைமையில் கொரோனா விப்புணர்வுடன் மாபெரும் போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " நீட்’ தேர்வு எனும் கொலைக்கருவியைக் கொண்டு மாணவப்பிள்ளைகளின் உயிரைக் குடிக்கும் மத்திய, மாநில அரசுகளின் கொடுங்கோன்மையைக் கண்டித்தும், ‘நீட்’ தேர்வை முற்றாக ரத்து செய்யக்கோரியும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக மாநிலம் முழுவதும் பதாகை ஏந்தும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று அவரது இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மாணவர் பாசறை நிர்வாகிகளுடன் இணைந்து பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். முன்னதாக, காவிரி நதிநீர் உரிமை மீட்புப் போராட்டத்தில் தன்னுயிரை ஈகம் செய்த காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஈகைச்சுடரேற்றி வீரவணக்கம் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

இன்று தமிழகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள், மாணவர் பாசறையினர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து நீட் தேர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தும் முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் #BanNEETSaveStudents என்ற குறிச்சொல்லுடன் இணைத்து அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் (Twitter) இக்குறிச்சொல் இன்று அதிகம் பகிரப்படுபவைகளில் முன்னணியில் இருந்து வருகிறது " என்று கூறப்பட்டுள்ளது..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naam Tamilar Katchi Protest against NEET 16 Sep 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->