அதிமுக - பாஜகவுடன் கூட்டணி... அறிவிப்பை வெளியிட்ட முக்கிய கட்சியின் தலைவர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகிறது. 

அதேபோல், புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டுமென முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் புதிய கட்சி அலுவலகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இவ்விழாவில் என்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். 

அதன் பிறகு கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் கோகுலகிருஷ்ணன் எம்பி, கோபிகா எம்எல்ஏ, முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், கல்யாணசுந்தரம், முன்னாள் எம்எல்ஏக்கள் நேரு, வைத்தியநாதன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

இவ்விழாவிற்கு பிறகு ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி என்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை இன்று முதல் தொடங்க உள்ளோம். ஏற்கனவே நாங்கள் அதிமுக-பாஜக கூட்டணியில் தான் இருக்கிறோம். இந்தக் கூட்டணி தொடரும் எனக் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

N R Congress alliance to admk and bjp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->