காவி உடையில் வலம் வந்த இஸ்லாமிய இளைஞர்.! ஏர்வாடியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரத்தை அடுத்த ஏர்வாடி பகுதியில் காவி உடை அணிந்து கொண்டு வளம் வந்த வடமாநில இஸ்லாமிய இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏர்வாடியில் காவி உடையில் சந்தேகம் படும்படி ஒரு நபர் சுற்றித்திரிந்து வந்ததாகவும் அவரது பேச்சு, நடவடிக்கைகளில் சந்தேகம் உள்ளதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற போலீசார், அந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் முதற்கட்டமாக அவரது பெயர் அப்துல்வகாப் முனாப் பெபாரி என்றும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

ராமேஸ்வரம் கீழக்கரை மற்றும் ஏர்வாடி ஆகிய பகுதிகளில் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் உள்நுழைய கூடும் என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் காவி உடையில் இஸ்லாமிய இளைஞர் அங்கு சுற்றிக்கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

muslim man wear Saffron dress and roaming in yearvadi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->