தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபலம்! கட்சியிலிருந்து திடீர் விலகல்! - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் இசையமைப்பாளர் தீனா இன்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து தமிழக பாஜகவில் இணைந்துள்ளார். 

தமிழ் திரை உலகில் இசையமைப்பாளர்களில் ஒருவர் இருந்த தீனா தமிழக அரசியல் களத்திலும் செயல்பட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரனை சந்தித்து அக்கட்சியில் இணைவதாக தெரிவித்தார். 

இந்த நிலையில் அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த தயாரிப்பாளர், நடிகர் ஆர்கே சுரேஷ் தமிழ் திரையுலகில் இருந்து பலர் பாஜகவில் இணைவார்கள், அப்போது அனைவருக்கும் மேலும் பல அதிர்ச்சி காத்திருக்கிறது என தெரிவித்திருந்தார். 

அவர் தெரிவித்தது போலவே அமமுகவில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இன்னும் யாரெல்லாம் பாஜகவிற்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் பாஜக தலைவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

music director dhina joined BJp From AMMK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->